பேரளத்தில் காற்றுடன் பலத்த மழை 50 ஆண்டு பழமையான மரம் வேரோடு சாய்ந்தது திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து மாற்றம்
பேரளத்தில் நேற்று காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக 50 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
நன்னிலம்:-
பேரளத்தில் நேற்று காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக 50 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
பரவலாக மழை
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் பேரளம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. 45 நிமிடங்கள் மழை நீடித்தது. பேரளம் பகுதியில் காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக போலீஸ் நிலையம் எதிரே இருந்த 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலுப்பை மரம் வேரோடு சாய்ந்தது.
இதனால் திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பேரளம் ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை மாற்று வழியில் இயக்க செய்து, போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனர். பேரளம் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த இலுப்பை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக 2 மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூரில் இருந்து கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. டெல்டா விவசாயிகள் நேரடி விதைப்பு செய்வதையே விரும்புகின்றனர்.
பெரும்பாலான விவசாயிகள் நேரடி விதைப்பு செய்யும் வகையில் கோடை உழவு செய்ய மழைக்காக காத்திருக்கும் நிலையில் நேற்று பரவலாக மழை பெய்ததால் நன்னிலம், பேரளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story