வினோத நோயால் அவதிப்படும் சிறுவன்


வினோத நோயால் அவதிப்படும் சிறுவன்
x
தினத்தந்தி 25 July 2021 9:12 PM IST (Updated: 25 July 2021 9:12 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே வினோத நோயால் அவதிப்படும் சிறுவனுக்கு சிகிச்சை பெற அரசு உதவி செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனி: 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர் கிராமத்தை சேர்ந்தவர் காட்டப்பன். அவருடைய மனைவி செல்வி. இந்த தம்பதியின் மகன் காவியபாலன் (வயது 13). இவன், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் பிறந்தது முதலே, வினோத நோயால் அவதிப்பட்டு வருகிறான். 

உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது போல், தோல் பகுதி முழுவதும் பரவி உள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அளித்தும் நோய் குணமாகவில்லை. அதாவது மனித உடம்பின் ‌தோல்கள் பல அடுக்குகளால் அமைந்திருக்கும்‌ நிலையில் காவியபாலனுக்கு ஒரு அடுக்கு தோல் மட்டுமே இருப்பதாகவும், இது மரபணு சார்ந்த பிரச்சினை‌ என்றும் டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது. 

இதற்கிடையே தனது மகனை கவனித்து கொள்வதற்காகவே தான் செய்து வந்த பிளம்பர் வேலையை விட்டுவிட்டு, காட்டப்பன் வீட்டிலேயே‌ மளிகைக்கடை நடத்தி வருகிறார். 


இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, கொரோனா‌ ஊரடங்கால் போதிய வருமானம் இல்லை. அதனால் தனது மகனுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. 

அவனுக்கு சிகிச்சை அளிக்க அரசு நிதி உதவி செய்யவேண்டும். அவன் மருத்துவ செலவுக்கு மாதந்தோறும் பணம் தேவைப்படுவதால் எங்களில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.


Next Story