முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 25 July 2021 9:13 PM IST (Updated: 25 July 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சாயல்குடி, 
கடலாடி மண்டல துணை தாசில்தார் சந்திரன், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி ஆகியோர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயக்கொடி, நவீன்குமார், கிராம உதவியாளர் கோபால் ஆகியோர் அருப்புக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் முககவசம் அணிந்து வியாபாரம் செய்யாத வியாபாரிகள், முககவசம் அணியாமல் பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்தனர். பின்னர் பொதுமக்களிடம் வருவாய்த்துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Next Story