பள்ளிகொண்டாவில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
கொரோனாவுக்கு 2 பேர் பலி
அணைக்கட்டு
கொரோனா தொற்று பாதிப்பு கடந்த வாரங்களில் சற்று குறைவாக இருந்தது. தற்போது இந்த பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் அதிபர் ஒருவரும், வியாபாரி ஒருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தொழிலதிபர் தனியார் மருத்துவமனையிலும், வியாபாரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தனர். இறுதிச் சடங்கில் உறவினர்கள் கலந்துகொள்ள அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், பள்ளிகொண்டா மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த தன்னார்வலர்கள், இருவரின் உடல்களையும் அடக்கம் செய்தனர்.
Related Tags :
Next Story