காகிதப்பட்டறை உழவர்சந்தையில் கலெக்டர் ஆய்வு
உழவர்சந்தையில் கலெக்டர் ஆய்வு
வேலூர்
வேலூர் காகிதப்பட்டறையில் உழவர்சந்தை உள்ளது. இங்கு தற்போது 43 விவசாயிகள் சில்லறை வணிகம் செய்து வருகின்றனர். இங்கு ஒரு நாளைக்கு சுமார் 11 டன் காய்கறிகள், கீரை வகைகள் விற்பனை ஆகிறது. இந்த உழவர் சந்தையில் நேற்று காலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது உழவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் குடிநீர் வசதி ஏற்படுத்திதர உத்தரவிட்டார்.
உழவர் சந்தை அருகே உள்ள தெருவில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுவதால் உழவர்சந்தைக்கு வருபவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் சங்கரன், வேளாண் இணை இயக்குனர் நரசிம்மரெட்டி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story