நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக உள்ளதா?; சப்-கலெக்டர் ஆய்வு
சேத்துப்பட்டு பகுதிகளில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என செய்யாறு சப்-கலெக்டர் விஜயராஜ் ஆய்வு செய்தார்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு பகுதிகளில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என செய்யாறு சப்-கலெக்டர் விஜயராஜ் ஆய்வு செய்தார்.
சப்-கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள் முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்காந இடங்களை செய்யாறு சப்-கலெக்டர் விஜயராஜ் ஆய்வுசெய்தார்.
அப்போது சேத்துப்பட்டு- செஞ்சி சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறந்தவெளி கிடங்கு மற்றும் நம்பேடு, கெங்காபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கவும், நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கவும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அருகே அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாதுகாப்பாக உள்ளதா?
திருவண்ணாமலை மாவட்டத்தில் 71 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 6 லட்சத்து 24 ஆயிரம் நெல் மூட்டைகள் சேத்துப்பட்டு- செஞ்சி சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அங்கு நேரில் சென்று நெல் மூட்டைகள் பாதுகாப்பாக உள்ளதா, மழைக்காலம் என்பதால் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க நெல் மூட்டைகள் மீது தார்பாய்கள் போடப்பட்டு உள்ளதா, மழைநீர் தேங்கி நிற்காமல் செல்ல கால்வாய் வசதி உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், அரசு நேரடி கொள்முதல் நிலைய கண்காணிப்பாளர் பழனி மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story