முக கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது ஆறுதல் அளிக்கும் விஷயம் என்றாலும் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு செயல்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களால் கொரோனா பரவல் மீண்டும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களை தடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி திண்டுக்கல் பஸ் நிலையத்தில் முக கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும் பஸ் நிலையத்தில் கட்டாய கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறையினரால் நடத்தப்படுகிறது.
நேற்று திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு முக கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தினர். பின்னர் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story