காட்பாடியில் சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை பலி


காட்பாடியில் சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 25 July 2021 9:59 PM IST (Updated: 25 July 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை பலி

வேலூர்

காட்பாடி, பாரதிநகரை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மகன் பாலசுப்பிரமணியம் (வயது 25). திருமணமாகி 4 மாதங்கள் ஆகிறது. பேக்கரி கடை வைத்துள்ளார். இவர் கடந்த 23-ந் தேதி மோட்டார்சைக்கிளில் கிறிஸ்டியான்பேட்டை நோக்கி சென்றார். மெட்டுக்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காட்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story