மண்டபம், சத்திரக்குடி, நயினார்கோவில் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மின்சாரம் நிறுத்தம்
ராமேசுவரம்,
மண்டபம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதை தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தங்கச்சிமடம், அரியான் குண்டு, பேய்க்கரும்பு, செம்ம மடம், டி.வி. ஸ்டேஷன், மார்க்கெட் தெரு, வேர் கோடு, கரையூர், புதுரோடு, நடராஜபுரம், வடகாடு ஆகிய பகுதிகளில் மின்சப்ளை இருக் காது. இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கங்கா தரன் தெரிவித்துள்ளார். இதேபோல சத்திரக்குடி மற்றும் நயினார்கோவில் துணை மின் நிலையத்தில் இருந்து மின் பராமரிப்பு பணிகள் வருகிற 27-ந்தேதி நடைபெறுவதால் சத்திரக்குடி, காமன்கோட்டை, சேமனூர், உலையூர், கோடரேந்தல், நயினார்கோவில், வல்லம், பகைவென்றி, வாதவனேரி, நகரம், பாண்டியூர், உதயகுடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என பரமக்குடி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் புண்ணிய ராகவன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story