புதிய நிர்வாகிகள் தேர்வு
புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
கீழக்கரை,
கீழக்கரையில் 10 வருடத்திற்கும் மேலாக சமூக நல சேவை செய்துவரும் கீழக்கரை மக்கள் டீம் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஜெகுபர் அலி தலைவராகவும், முகம்மது அப்துல் காதர் துணை தலைவராகவும், அப்துல் காதர் செயலாளராகவும், ஐயூப்கான் துணை செயலாளராகவும், அகமது பயாஸ் பொருளாளராகவும், தேர்வு செய்யப்பட்டனர். இதில் செயற்குழு உறுப்பினர்கள் ரமீஷ், கஸ்சாலி, காதர், முகமது ரபீக், முன்னாள் கவுன்சிலர் அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர். தற்போது பரவி வரும் கொரோனா பெரும் தொற்று காரணமாக தொழில் செய்யமுடியாமல் சிரமம் அடையும் அனைத்து சமுதாய மக்களுக்கு உதவி செய்வது குறித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story