மாணவர்களுக்கு இணையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


மாணவர்களுக்கு இணையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 July 2021 11:18 PM IST (Updated: 25 July 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு இணையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கரூர்
கரூர் மாவட்டத்தில் பள்ளியில் படிக்கும் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் இணையவழி குற்ற செயல்களில் பாதிக்கப்படும் போது குற்றங்களிலிருந்து பள்ளி மாணவர்களையும், கல்லூரி மாணவர்களையும் பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் போலீஸ் சைபர் லேப் தொடங்கப்பட்டு, அதில் மாணவர்களுக்கு இணையவழி குற்றங்கள் மற்றும் இணையவழியில் உள்ள நிறைகுறைகளை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

Next Story