தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கலெக்டர் ஆய்வு


தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 25 July 2021 11:20 PM IST (Updated: 25 July 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கலெக்டர் ஆய்வு நடந்தது.

கரூர்
கரூர் மாவட்டத்தில் மதுரை-சேலம் தேசிய நெஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பெரிச்சிபாளையம் பிரிவு, செம்மடை, பெரியார்வளைவு, திருக்காம்புலியூர், மணல்மேடு, ஜவுளிப்பூங்கா, மண்மங்கலம், தவிட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் விபத்துக்களை தடுப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பெரிச்சிப்பாளையம் மற்றும் பெரியார் வளைவு ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார். மேலும் இதர பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் அணுகு சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கவும், இரவுநேரங்களில் வேகத்தடை தெரியும் அளவில் எதிரொளிப்பான்கள் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலை பகுதி உள்ளதென்றும், வேகத்தடைகள் உள்ளதென்றும், வாகன ஓட்டிகள் மெதுவாகச்செல்ல வேண்டும் என்பதை விளக்கும் வகையிலான செய்திகள் அடங்கிய பலகைகளை (SIGN BOARD) வைக்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் தவிட்டுப்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக ஒப்புதல் பெற்பட்டுள்ளது என்றும் இன்னும் ஒருமாத காலத்தில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story