கூலி தொழிலாளி திடீர் சாவு
கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
க.பரமத்தி
கரூர் அருகே புத்தாம்புதூர் சமுத்துவபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சின்ன தாராபுரம் அருகே வெள்ளரிப்பட்டியில் கூலி வேலை செய்துவிட்டு மது குடித்துள்ளார். இதனையடுத்து மது போதையில் ஐந்து ரோடு-வெள்ளரிப்பட்டி சாலையில் தீடீரென தவறி விழுந்து சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னதாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story