புன்னம் சத்திரம் அருகே பழுதடைந்த நிழற்குடை சீரமைக்கப்படுமா?


புன்னம் சத்திரம் அருகே பழுதடைந்த நிழற்குடை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 25 July 2021 11:24 PM IST (Updated: 25 July 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

புன்னம் சத்திரம் அருகே பழுதடைந்த நிழற்குடை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நொய்யல்
பயணிகள் நிழற்குடை
கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்தில் இருந்து காகித ஆலை செல்லும் அதியமான்கோட்டை பிரிவு சாலை பகுதியில் பஸ் நிறுத்ததுடன் கூடிய பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இங்கிருந்து ஓலப்பாளையம், கரியாம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு அந்த வழியே செல்லும் மினி பஸ்கள் மற்றும் அரசு நகரப் பஸ்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் நிழற்குடையின் மேற்கூரை உடைந்து பழுதடைந்துள்ளது. 
எதிர்பார்ப்பு
அதேபோல் பயணிகள் அமர்ந்து இருக்கும் வகையில் கான்கிரீட் பலகை போடப்பட்டுள்ளது. ஆனால் மர்ம நபர்கள் கான்கிரீட் பலகைகளை திருடிச் சென்று விட்டனர். மேலும் மழை காலங்களில் இந்த நிழற்குடையில் நிற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த நிழற்குடை சீரமைக்கப்படுமா? அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story