மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்


மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 25 July 2021 11:27 PM IST (Updated: 25 July 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

பிற்படுத்தப்பட்டோர் சமுதாயங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

கரூர்
கரூர் ராயனூரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சமுதாயங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் எம்.பி.சி.ல் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஒரு சாதியினருக்கு மட்டும் வழங்கிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பின் ஆணையத்தில் அனைத்து சமுதாயத்தின் உறுப்பினர்களின் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story