வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 140 நூலகங்களின் பயன்பாட்டுக்கு 4 லட்சம் புத்தகங்கள்
140 நூலகங்களின் பயன்பாட்டுக்கு 4 லட்சம் புத்தகங்கள்
வேலூர்
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளின்படி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் முதல் நூலகங்கள் செயல்பட தொடங்கியது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 140 நூலகங்கள் திறக்கப்பட்டன.
நூலகதத்துக்கு வரும் வாசகர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், நூலகத்தின் வெளியே கைகளை கழுவ வேண்டும் என்பது உள்பட பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்தநிலையில் வேலூர் மாவட்ட மைய நூலகம் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற, ஊர்ப்புற மற்றும் கிளை நூலகங்களுக்கு விநியோகம் செய்வதற்காக 8 ஆயிரத்து 150 தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் 4 லட்சம் புத்தகங்கள் வரப்பெற்றுள்ளன. இந்த புத்தகங்களை நூலகங்களுக்கு ஏற்ப பிரித்து அனுப்பி வைக்கும் பணியில் மைய நூலக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை நூலக அலுவலர் பழனி கண்காணித்தார்.
Related Tags :
Next Story