தீக்குளித்து பெண் தற்கொலை


தீக்குளித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 July 2021 12:01 AM IST (Updated: 26 July 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

சாக்கோட்டை போலீஸ்சரக பகுதியில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்குடி,

சாக்கோட்டை போலீஸ் சரகம் பெத்தாச்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அழகர். இவர் கல் சிற்ப வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. கலைச்செல்வி கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் கலைச்செல்வி திடீரென மண்எண்ெணய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் தீ மளமளவென அவரது ஆடையில் பிடித்தது. இதனால் அவர் அலறி துடித்தார். அவரது அலறல் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டனர். பின்னர் காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி கலைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story