நாட்டு துப்பாக்கியுடன் 2 பேர் கைது


நாட்டு துப்பாக்கியுடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 July 2021 12:28 AM IST (Updated: 26 July 2021 12:28 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே நாட்டு துப்பாக்கியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு செவ்வூர்-துவார் சாலையில் ரோந்து சென்றனர்.அப்போது கன்னிமாபாறை கொல்லங்கண்மாயில் 4 பேர் சந்தேகத்திற்கு இடமாக நிற்பதை பார்த்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மற்ற 2 பேர் ஒரு நாட்டுத்துப்பாக்கியுடன் போலீசாரிடம் சிக்கினர்.
விசாரணையில் அவர்கள் வேட்டைக்காக சிவகங்கை மாவட்ட எல்லைக்குள் வந்ததும் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த கணேசன்(வயது 35), கட்டாண்டிப்பட்டியை சேர்ந்த தவசிலிங்கம்(31) என்பதும் தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கியையும், அதற்கான வெடிமருந்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story