காரைக்குடி,
காரைக்குடி அருகே கல்லல்-பனங்குடி இடையே உள்ள ெரயில்வே தண்டவாளத்தில் ெரயிலில் அடிபட்டு தலை சிதைந்து கை, கால்கள் உடைந்த நிலையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் பிணம் கிடந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் காரைக்குடி ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. விசாரணையில் இறந்தவர் அரண்மனை சிறுவயல் பகுதியை சேர்ந்த ராஜாமணி (வயது 66) என்றும் காலையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ெரயிலில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.