திருமலை நாயக்கர்மகால் ரூ.8.27 கோடி செலவில் சீரமைப்பு


திருமலை நாயக்கர்மகால் ரூ.8.27 கோடி செலவில் சீரமைப்பு
x
தினத்தந்தி 26 July 2021 12:55 AM IST (Updated: 26 July 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

திருமலை நாயக்கர் மகால் ரூ.8.27 கோடி செலவில் சீரமைக்கப்படும் என அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் கூறினார்.

மதுரை
திருமலை நாயக்கர் மகால் ரூ.8.27 கோடி செலவில் சீரமைக்கப்படும் என அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் கூறினார்.
சீரமைப்பு
மதுரை திருமலைநாயக்கர் மகாலில் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமலை நாயக்கர் மகாலில் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்புப்பணிகள் ரூ.8 கோடியே 27 லட்சம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கான அரசாணை கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. 
நடவடிக்கை
சட்டசபை பொதுத்தேர்தல் மற்றும் கொரேனா நோய்தொற்று ஆகிய காரணத்தினால் பணியை தொடங்க முடியவில்லை. இந்த பணியை தொடங்கி வேகமாக முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன. மேலும் பார்வையாளர்களுக்கு அரண்மனை எளிதில் தெரியக்கூடிய வகையில் முகப்பு விளக்குகள் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன. இந்த பணியை மேற்கொள்வதற்கு பணி ஆணை வெளியீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணியை தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷன் மூலம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 
இந்த ஆய்வின் போது கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story