மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 26 July 2021 1:01 AM IST (Updated: 26 July 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

களியக்காவிளை, 
கேரள மாநிலம் பரிசுக்கல் அருகே கொல்லியோடு பகுதியை சேர்ந்த ரஞ்சன் மகன் மனு (வயது 23). இவர் குமரி மாவட்டம் பளுகல் அருகே மூவோட்டுகோணத்தில் இருந்து கண்ணுமாமூடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  மூவோட்டுக்கோணம் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற காரின் பக்க வாட்டில் மோட்டார் சைக்கிள் உரசியது. மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலைேயாரத்தில் உள்ள காம்பவுண்ட் சுவரில் மோதியது. இதில் மனு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனு பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story