தடியங்காய் விலை குறைவால் விவசாயிகள் கவலை


தடியங்காய் விலை குறைவால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 26 July 2021 1:11 AM IST (Updated: 26 July 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை பகுதியில் தடியங்காய் விலை குறைவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை ஒன்றியம் சிப்பிபாறை, தாயில்பட்டி, தெற்கு ஆனைக்குட்டம், வெற்றிலையூரணி, மேல ஒட்டம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தடியங்காய் பயிரிட்டுள்ளனர். கொடியில் வளரக்கூடிய பூசணிக்காய் வகையை சேர்ந்த தடியங்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. ேமலும் இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன. இதனால் நிறைய பேர் தடியங்காயை விரும்பி சாப்பிடுகின்றனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் தடியங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ குணம் நிறைந்து உள்ளதால் இந்த காய் விற்பனை நன்றாக இருக்கும். அத்துடன் திருஷ்டி கழிப்பதற்காக நிறைய பேர் வாங்கி செல்கின்றனர். 
கடந்த ஆவணி மாதத்தில் ஒரு காய் ரூ.25 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர்.  தற்போது ஆடி மாதம் என்பதால் சுபகாரிய நிகழ்ச்சிகள் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இந்த காய்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. 
தற்போது  தடியங்காய் ஒன்று ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். ஆதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்வதை விட்டு விட்டதால் கொடியிலேயே தடியங்காய் வீணாகி வருகிறது.
இ்வ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story