நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2021 1:41 AM IST (Updated: 26 July 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

பேட்டையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேட்டை:
பேட்டை முனிசிபல் பஸ் நிறுத்தம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாக்குட்டி, மத்திய மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் நெல்லை சட்டமன்ற தொகுதி தலைவர் மணிகண்டராஜ், தொகுதி பொருளாளர் செல்வ கணேசன், துணை செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story