கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 26 July 2021 1:44 AM IST (Updated: 26 July 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உயிருடன் மீட்கப்பட்டார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள ஒரு கிணற்றில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் தவறி உள்ளே விழுந்தார். அவர் தண்ணீரில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அந்த வழியாக சென்றவர்கள், இதுகுறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் கிணற்றில் விழுந்த வாலிபரை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவரிடம் விசாரித்ததில், அவர் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தை சேர்ந்த லிங்கராஜின் மகன் விஜி(வயது 27) என்பது தெரியவந்தது. கிணற்றில் விழுந்த வாலிபரை விரைந்து வந்து உடனடியாக உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

Next Story