சோமரசம் பேட்டை அருகே திருமண மண்டபத்தில் 28 பவுன் நகை திருட்டு


சோமரசம் பேட்டை அருகே திருமண மண்டபத்தில் 28 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 26 July 2021 1:46 AM IST (Updated: 26 July 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

சோமரசம் பேட்டை அருகே திருமண மண்டபத்தில் 28 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபா்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சோமரசம்பேட்டை, 

சோமரசம் பேட்டை அருகே திருமண மண்டபத்தில் 28 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபா்களை போலீசார் ேதடி வருகிறார்கள்.

  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருமண நிகழ்ச்சி

  மதுரை வாணியர் 2-வது சந்தில் வசிப்பவர் கவிதா (வயது 36). சம்பவத்தன்று வயலூரில் உள்ள உறவினரின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் தனது உறவினர்களுடன் முதல் நாளே வந்து திருமண மண்டபத்தில் தங்கினார்.
  திருமணத்தின் போது அணிந்து கொள்வதற்காக தனது கைப்பையில் 28 பவுன் நகைகளை வைத்து இருந்தார். அங்கு ஒரு அறையில் கைப்பையை வைத்து விட்டு கழிவறைக்கு சென்றார்.
நகை, பணம் திருட்டு

  சிறிது நேரத்தில் அவர் திரும்பி வந்து பாா்த்த போது, கவிதாவின் கைப்பையை காணவில்லை. அதில் 28 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரம், செல்போன் இருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
  பின்னர் இதுபற்றி சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவிதாவின் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story