குழந்தையை பஸ் நிலையத்தில் தவறவிட்டு பஸ் ஏறிய பெற்றோர் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்


குழந்தையை பஸ் நிலையத்தில் தவறவிட்டு பஸ் ஏறிய பெற்றோர் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 26 July 2021 1:46 AM IST (Updated: 26 July 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

பஸ் நிலையத்தில் பெற்றோர் தவறவிட்டு சென்ற குழந்தையை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்

குழந்தையை பஸ் நிலையத்தில் தவறவிட்டு பஸ் ஏறிய பெற்றோர்
போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
துறையூர்,
நாமக்கல் மாவட்டம் வரகூரை சேர்ந்தவர் துணிக்கடை ஊழியர் பெரியசாமி (வயது 35). இவர் தனது மனைவி, 3 வயது மகன் வெற்றிவேல் மற்றும் உறவினர்களை அழைத்துக்கொண்டு நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு குழந்தைக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு நேற்று மாலை மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல துறையூருக்கு பஸ்சில் வந்தார். துறையூரில் இறங்கியதும், பெரியசாமி கடைக்கு சென்றுள்ளார். அப்போது நாமக்கல் பஸ்வரவே அவர்கள் குழந்தையை விட்டு விட்டு பஸ்சில் ஏறிவிட்டனர். பஸ் தா.பேட்டை அருகே சென்றபோது தான் குழந்தையை தவற விட்டது. அவர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர் இதுபற்றி தா.பேட்டை போலீசார் மூலம் துறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து, போலீசார் குழந்தையை தேடிய போது, அங்கு பழவியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்கள் தனியாக தவித்துக்கொண்டிருந்த குழந்தையை மீட்டு வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெரியசாமியை வரவழைத்து அவரிடம் குழந்ைதயை போலீசார் ஒப்படைத்தனர்.

Next Story