167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி; கலெக்டர் வழங்கினார்
சிவகிரியில் 167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் கோபால சுந்தரராஜ் வழங்கினார்.
சிவகிரி:
சிவகிரியில் 167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வழங்கினார்.
நலத்திட்ட உதவி
சிவகிரியில் “உங்கள் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் பொருட்டு தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிவகிரி பஸ்நிலையம் அருகே தேவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தனுஷ்குமார் எம்.பி., டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகிரி தாசில்தார் ஆனந்த் வரவேற்றார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கி, 167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 47 நபர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், 23 பேருக்கு விதவை உதவித்தொகை தலா ஆயிரம் ரூபாய் வீதமும், கணவனால் கைவிடப்பட்டோர் 2 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதமும், முதிர் கன்னிகள் உதவித்தொகை 24 பேருக்கும், இயற்கை மரண உதவித்தொகை 15 பேருக்கு 3 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாயும் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும் சமூக நலத்திட்டத்தின் கீழ் 3 பெண்களுக்கு தையல் எந்திரம் உள்பட மொத்தம் 167 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 14 ஆயிரத்து 270 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கலந்துகொண்டவர்கள்
மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, சங்கரன்கோவில் உதவி கலெக்டர் (பொறுப்பு) ராஜ மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஷீலா, சிவகிரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், துணைத் தாசில்தார் சரவணன், தேர்தல் துணை தாசில்தார் கருத்தப்பாண்டியன், வட்ட வழங்கல் தாசில்தார் திருமலைச் செல்வி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story