வர்த்தக கழக நிர்வாகிகள் கூட்டம்


வர்த்தக கழக நிர்வாகிகள் கூட்டம்
x
தினத்தந்தி 26 July 2021 2:16 AM IST (Updated: 26 July 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் வர்த்தக கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

தென்காசி:
நெல்லை மாவட்ட வர்த்தக கழக நிர்வாக குழு மற்றும் இணைப்பு சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவரும், தட்சணமாற நாடார் சங்க தலைவருமான ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மீரான், துணைத்தலைவர் மார்ட்டின், மாநில இணை செயலாளர் ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் சாலமோன் வரவேற்றார். வணிகர் சங்க பேரவை மாநில பேச்சாளர் ராமச்சந்திரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.கூட்டத்தில், தென் மாவட்டங்கள் இணைந்த வர்த்தக மண்டல தலைவராக ஆர்.கே.காளிதாசன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். தென் மாவட்டங்களில் 5 மாவட்டங்கள் ஒருங்கிணைந்த கமிட்டி தேர்வு செய்ய வேண்டும். திசையன்விளை நகர பஞ்சாயத்தை நகராட்சியாக மாற்ற அரசிடம் வலியுறுத்த வேண்டும். அனைத்து வியாபாரிகளுக்கும் நலவாரியம் அமைக்க வேண்டும். கொரோனா காலத்தில் கஷ்டப்படும் வியாபாரிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும். தென்காசி ெரயில் நிலையம் அருகில் உள்ள ெரயில்வே சுரங்கப் பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Next Story