காரமடையில் விபசார பெண் புரோக்கர் கைது


காரமடையில் விபசார பெண் புரோக்கர் கைது
x
தினத்தந்தி 26 July 2021 2:57 AM IST (Updated: 26 July 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

காரமடையில் விபசார பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டார்.

காரமடை

காரமடையை அடுத்துள்ள கே.புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 70). இவர் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் வேலை பார்த்து வருகிறார். இவர் இளம்பெண்கள் மற்றும் வறுமையில் உள்ள குடும்ப பெண்களை பணத்தாசை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக தெரிகிறது.

 இந்த நிலையில் தொட்டிப்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம், பாக்கியலட்சுமி தன்னிடம் இளம்பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசம்  அனுபவிக்கலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் காரமடை போலீசுக்கு தகவல் கொடுத்தார். 

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாக்கியலட்சுமியை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்த 5 இளம்பெண்களை போலீசார் மீட்டு, கோவையில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Next Story