குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம்


குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம்
x
தினத்தந்தி 25 July 2021 9:54 PM GMT (Updated: 25 July 2021 9:54 PM GMT)

குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம்

ஊட்டி

குன்னூர் அருகே அளக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. தேயிலை தோட்டங்களில் முகாமிடும் கரடிகள் அவ்வப்போது சாலையை கடந்து சென்று வருகின்றன. இந்தநிலையில் குடியிருப்பு பகுதியில் தடுப்பு சுவர் மீது கரடி ஒன்று உலா வந்தது. 

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, பலமுறை புகார் அளித்தும் வனத்துறையினர் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றனர்.

Next Story