பூந்தமல்லியில் சாலை விபத்தில் சிக்கிய வாலிபருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி
பூந்தமல்லியில் சாலை விபத்தில் சிக்கிய வாலிபருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி தனது காரிலேயே மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி மேல்மா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 23). இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பூந்தமல்லி அருகே பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது இவர் மீது கார் மோதியது. இதில் காயம் அடைந்த அவர், நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். உடனடியாக அங்கிருந்த சிலர், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனது.
இதற்கிடையில் அந்த வழியாக கிருஷ்ணகிரி சென்று கொண்டிருந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விபத்தில் சிக்கி ராஜேந்திரன் துடிப்பதை கண்டு காரை நிறுத்தி கீழே இறங்கினார். பின்னர் தனது காரிலேயே அவரை ஏற்றி பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும், மேல் சிகிச்சைக்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
விபத்தில் சிக்கிய வாலிபருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவி செய்த காட்சிகளை சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

Related Tags :
Next Story