ஸ்ரீவைகுண்டத்தில் பிரபல ரவுடி கைது


ஸ்ரீவைகுண்டத்தில் பிரபல ரவுடி கைது
x
தினத்தந்தி 26 July 2021 6:11 PM IST (Updated: 26 July 2021 6:11 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டத்தில் பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் மாரி ராஜா (எ) குணா (வயது 31).  பிரபல ரவுடி. இவர் மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட 14 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சம்பவத்தன்று ஸ்ரீவைகுண்டத்தில் பெண்ணை வழிமறித்து, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளார். அவரை போலீசார் தேடிவந்தனர். நேற்று ஸ்ரீவைகுண்டம் வேன் ஸ்டாண்ட் பகுதியில் இருந்த குணாவை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

Next Story