தேனியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி:
தேனி நகர் மதுரை சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் சமையல் கியாஸ் சிலிண்டருடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வுக்கு காரணமான கலால் வரியை குறைத்து எரிபொருள் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், தமிழக மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய அரசு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வீதம் அடுத்த 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும், புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் நேதாஜி சேகர், தேனி நகர செயலாளர் அன்பு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story