தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது
கோவில்பட்டி:
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தேர்தலில் தி.மு.க. வாக்குறுதி அளித்ததை போல், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக தடை செய்ய சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஆக்சிஜன் உற்பத்திக்காக கூடுதலாக 6 மாதம் ஆலையை திறக்க உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரும் ஸ்டெர்லைட் ஆலையின் முயற்சியை தமிழக அரசு எதிர்க்க வேண்டும். சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அம்பேத்கர், பெரியார், மார்க்சிய உணர்வாளர்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமை தாங்கினார். ஆதிதமிழர் கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் காளிமுத்து, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் தாவீது ராஜா, சமூக ஆர்வலர்கள் சக்திவேல், கருப்பசாமி, மோட்சம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் உதவி கலெக்டர் சங்கரநாரா யணனிடம் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story