காயல்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகம் திறப்பு


காயல்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகம் திறப்பு
x
தினத்தந்தி 26 July 2021 8:00 PM IST (Updated: 26 July 2021 8:00 PM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது

ஆறுமுகநேரி,:
காயல்பட்டினம் பைபாஸ் ரோட்டில் தூத்துக்குடி புறநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முகமது நஜீப் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் மீராசாஹிப் மாவட்ட பொருளாளர் குறுகை ராசுகுட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொது செயலாளர் தமிய்யா கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.கட்சி கொடியினை மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது ஏற்றினார். மேலும் காயல்பட்டினத்தில் ஐந்து இடங்களில் கட்சி கொடிகள் ஏற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அஹமது சாஹிப், இஸ்லாமிய கலாச்சார பேரவையின் நிர்வாகி அகமது மீரா தம்பி, மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காயல்பட்டினம் நகர மனித நேய ஜனநாயக கட்சியின் செயலாளர் இப்னுமாஜா நன்றி கூறினார்.

Next Story