திருப்பத்தூர் அருகே முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை
திருப்பத்தூர் அருகே முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே அனேரி கிராமத்தில் முட்புதர் ஓரம் குழந்தை அழும் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேரில் சென்று பார்த்தனர். அப்போது பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை போர்வையில் சுற்றப்பட்டு அழுது கொண்டே இருந்தது. உடனடியாக குழந்தையை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்தனர்.
பின்னர் திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கிராம நிர்வாக அலுவலர் முருகன், தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அந்த பெண் குழந்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
யாருடைய குழந்தை?, எதற்காக முட்புதரில் வீசி சென்றார்கள்?, பெண் குழந்தை என்பதற்காகவா? அல்லது கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story