தேனி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா


தேனி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 July 2021 3:18 PM GMT (Updated: 26 July 2021 3:18 PM GMT)

தேனி மாவட்டத்தில் மேலும் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தேனி:
தேனி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 864 ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் 514 பேர் உயிரை பறித்துள்ளது. நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 22 பேர் நேற்று குணமாகினர். மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Next Story