உடுமலை நகராட்சி வாரச்சந்தையில் பொதுமக்கள் வருகை குறைந்ததால் வியாபாரம் மிகவும் குறைவாக இருந்தது.
உடுமலை நகராட்சி வாரச்சந்தையில் பொதுமக்கள் வருகை குறைந்ததால் வியாபாரம் மிகவும் குறைவாக இருந்தது.
உடுமலை,
உடுமலை நகராட்சி வாரச்சந்தையில் பொதுமக்கள் வருகை குறைந்ததால் வியாபாரம் மிகவும் குறைவாக இருந்தது.
நகராட்சி வாரச்சந்தை
உடுமலை ராஜேந்திரா சாலையில் நகராட்சி வாரச்சந்தை உள்ளது. இந்த வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கூடுவது வழக்கம். இந்த வாரச்சந்தை கூடும் திங்கட்கிழமையன்று வியாபாரிகள் அதிகம் பேர் காய்கறி கடைகளை வைப்பது வழக்கம். பொதுமக்களும் அதிக அளவில் வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ்தொற்றுபரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தைகள் செயல்படுவதற்கு அரசு தடை விதித்திருந்தது. அதனால் இந்த வாரச்சந்தை மூடப்பட்டிருந்தது.
அதே சமயம் ஊரடங்கில் அரசு அடுத்தடுத்து அளித்த தளர்வுகளின்படி இந்த வாரச்சந்தை வளாகத்தின் ஒருபகுதியில் உள்ள தினசரி சந்தை, அதையடுத்துள்ள இடத்தில் அமைந்துள்ள காய்கறிகமிஷன் மண்டிகள் ஆகியவை அடுத்தடுத்து திறக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன. அத்துடன் பொதுமக்களின் வசதிக்காக காய்கறிகடைகளை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியதைத்தொடர்ந்து சாலையோரம் தற்காலிக காய்கறிகடைகள் அதிகரித்தன. காய்கறிகள் வீட்டிற்கு அருகிலேயே கிடைப்பதால் பொதுமக்கள்அங்கு சென்று வாங்கி பழகிவிட்டனர். வாரச்சந்தைக்கு முன்பும் சாலையோரம் திறந்த வெளியில் காய்கறி கடைகள்செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் வாரச்சந்தையை திறப்பதற்கு அனுமதியில்லாமலிருந்தது.
கூட்டம் இல்லை
இந்த நிலையில் அரசின் கூடுதல் தளர்வுகளின்படி கடந்த3வாரங்களாகஉடுமலை நகராட்சி வாரச்சந்தை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.கொரோனா ஊரடங்கிற்குபிறகு தளர்வுகளின்படி 3-வது வாரமாக நேற்று இந்த வாரச்சந்தை கூடியது. ஆனால் வியாபாரிகள் குறைந்த அளவிலேயே காய்கறி கடைகளை வைத்திருந்தனர். வாரச்சந்தை கூடும் நாட்களில், வாரச்சந்தை வளாகத்திற்குள் காய்கறி கடைகள் வைக்கப்படும் பலஇடங்களில் காய்கறி கடைகள் வைக்கப்படவில்லை. அந்த இடம் காலியாக இருந்தது.
அத்துடன் பொதுமக்கள்கடந்த சிலமாதங்களாக குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்கு அருகிலேயேகாய்கறிகளை வாங்கி வந்தநிலையில்திங்கட்கிழமையான நேற்று கூடிய வாரச்சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு வந்தபொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. அதேசமயம் இந்த வாரச்சந்தை வளாகத்தின் தெற்கு பகுதியில் செயல்படும் கமிஷன் மண்டிகளில் இருந்து, வியாபாரிகள் வழக்கம் போல் காய்கறிகளை வாங்கி சரக்கு வாகனங்களில் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story