உடுமலையில் உள்ள ரேஷன்கடைகளில் பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பதிவாகாததால் பலர் புலம்பியபடி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


உடுமலையில் உள்ள ரேஷன்கடைகளில் பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பதிவாகாததால் பலர் புலம்பியபடி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
x
தினத்தந்தி 26 July 2021 9:10 PM IST (Updated: 26 July 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் உள்ள ரேஷன்கடைகளில் பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பதிவாகாததால் பலர் புலம்பியபடி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

உடுமலை,
உடுமலையில் உள்ள ரேஷன்கடைகளில் ‘பயோமெட்ரிக்’  கருவியில் கைரேகை பதிவாகாததால் பலர் புலம்பியபடி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ரேஷன் கடைகள்
ரேஷன்கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு, ரேஷன் கடையில் உள்ள பயோமெட்ரிக் கருவியில் ரேஷன் அட்டைதாரர் கை விரலை பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் கைரேகை பதிவு ஆவதில் சிக்கல் ஏற்பட்டு காலதாமதமாகிறது. இதற்கு காரணம் சர்வர் பிரச்சினை என்று கூறப்படுகிறது. இந்த நிலை அடிக்கடி ஏற்படுகிறது.
அதேபோன்று நேற்றும் உடுமலையில் ரேஷன்கடைகளில் உள்ள பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பதிவாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒவ்வொருவருக்கும் பலமுறை கைரேகையை பதிவு செய்வதற்கு விரல்களை மாற்றி, மாற்றி வைத்து முயற்சி செய்யவேண்டியிருந்தது.
அதனால் நீண்ட நேரம் ஆனது. ரேஷன்கடை ஊழியர்களும் என்ன செய்வதென்று புரியாமல் சிரமத்திற்குள்ளாகினர். கைரேகை பதிவு ஆகாததால் பொதுமக்கள் சிலர், பொருட்களை வாங்க முடியாமல் புலம்பியபடி திரும்பி சென்றனர்.
கோரிக்கை
இந்த மாதத்திற்கான (ஜூலை) அத்தியாவசிய பொருட்களை வாங்கிகொள்வதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. கடைசி நாட்களில் பொருட்களைவாங்குவதற்கு வரும் பொதுமக்கள் கூட்டம்அதிகரித்துவிடும்.
அதனால் பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பதிவு ஆவதற்குரிய நடவடிக்கைகள் அல்லது மாற்று ஏற்பாடுகளை செய்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story