மாவட்ட செய்திகள்

நத்தக்காடையூர் பகுதிகளில் குறைந்த நீர் நிர்வாகத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெண்டைக்காய் அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. + "||" + nathkkadaiuur

நத்தக்காடையூர் பகுதிகளில் குறைந்த நீர் நிர்வாகத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெண்டைக்காய் அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நத்தக்காடையூர் பகுதிகளில் குறைந்த நீர் நிர்வாகத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெண்டைக்காய் அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நத்தக்காடையூர் பகுதிகளில் குறைந்த நீர் நிர்வாகத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெண்டைக்காய் அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முத்தூய்
நத்தக்காடையூர் பகுதிகளில் குறைந்த நீர் நிர்வாகத்தில் சாகுபடி செய்யப்பட்ட வெண்டைக்காய் அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கீழ்பவானி பாசன பகுதிகள்
 நத்தக்காடையூர், பழையகோட்டை, குட்டப்பாளையம், முள்ளிப்புரம், மருதுறை, பரஞ்சேர்வழி  சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாய சாகுபடி பணிகள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக திறந்துவிடப்படும் தண்ணீரை பயன்படுத்தி  நஞ்சை சம்பா நெல் மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி செய்து பலனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து  கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் இறுதி வரை 4 மாதங்களுக்கு சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால்  விவசாயிகள் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் நீரினை பயன்படுத்தி  வெண்டைக்காய் சாகுபடி களை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கினர். இதன்படி இப்பகுதி விவசாயிகள் தங்களது வயல்களில் அரை ஏக்கர் முதல் 2 ஏக்கர் பரப்பளவு வரை வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். இதன்படி 1 ஏக்கர் வெண்டைக்காய் சாகுபடி செய்வதற்கு உழவு கூலி, பார் கட்டுதல், அடி உரமிடுதல், விதை ஊன்றுதல், களை எடுத்தல், உர நிர்வாகம், பயிர்பாதுகாப்பு பேணுதல், அறுவடை கூலி என மொத்தம் ரூ.22 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் வரை முதலீடு செய்துள்ளனர்.
வெண்டை அறுவடை 
இந்த வெண்டை செடிகளில் காய்கள் காய்த்துள்ளன. இதனால் வெண்டைக்காய் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
இதுபற்றி நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- 
பொதுவாக வெண்டைக்காய் சாகுபடி கோடை காலத்தில் செய்தாலும் பருவ கால சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் பலன் தரக்கூடியது. வெண்டைக்காய் சாகுபடி மற்ற வேளாண் சாகுபடிக்கு இணையாக வருமானம் அளிக்கக்கூடியது. இதனால் வெண்டைக்காய் சாகுபடி தற்போது அரை ஏக்கர் முதல் சுமார் 2 ஏக்கர் வரை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
 வெண்டைக் காய்களை  முத்தூர், நத்தக்காடையூர், வெள்ளகோவில், காங்கேயம் மற்றும் ஈரோடு மாவட்டம் அரச்சலூர், சிவகிரி, கந்தசாமிபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்படும் வாரச் சந்தை மற்றும் தினசரி கடைகளுக்கு  கொண்டு சென்று விற்று பலன் அடைவது வழக்கம். அறுவடை செய்யப்பட்ட வெண்டைக்காய்களை அருகில் உள்ள காய்கறி கடைகள் மற்றும் வாரச்சந்தைகளுக்கு மொத்த விற்பனைக்காக அனுப்பி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
இவ்வாறு அவர்கள் கூறினர்.