சாராயம் காய்ச்சியவர் கைது


சாராயம் காய்ச்சியவர் கைது
x
தினத்தந்தி 26 July 2021 9:29 PM IST (Updated: 26 July 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

சாராயம் காய்ச்சியவர் கைது

பொங்கலூர்,
பொங்கலூர் அருகே  மோட்டார்சைக்கிளில் கோவை மாவட்டம் சூலூர் தாலுகா வதம்பச்சேரி கிராமத்திலிருந்து வீட்டில் சாராயம் காய்ச்சி கடத்தி வருவதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கரடிவாவி ரோடு கிருஷ்ணாபுரம் பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டதில் அந்த நபரிடம் ஒரு லிட்டர் பாட்டில்களில் அடைத்து வைத்து மொத்தம் 6 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்
சூலூர் பெரிய வதம்பச்சேரியை சேர்ந்த சுந்தர்ராஜ் (36) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீது காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story