பல்லடத்தில், சீரான குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

பல்லடத்தில், சீரான குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
x
தினத்தந்தி 26 July 2021 9:47 PM IST (Updated: 26 July 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில், சீரான குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

பல்லடம்
பல்லடத்தில், சீரான குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
குறைவான குடிநீர்
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம்புதூர் ஊராட்சி திருவள்ளுவர் நகர், அறிவொளிபுதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு வட்டார வளர்ச்சி அலுவலரை சந்திக்க அனுமதி கோரினர். அதற்கு அங்கிருந்த அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் கூட்டத்திற்கு சென்றுள்ளதாகவும், வருவதற்கு கால தாமதம் ஆகும் எனக் கூறியுள்ளனர். 
அதற்கு இந்த பொதுமக்கள் மனு கொடுக்க வேண்டும் எனக்கு கூறவே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனுராதா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கடந்த 2 வருடங்களாகவே இந்த பகுதியில் குறைவாக குடிநீர் வருகிறது குடிப்பதற்கு கூட வீட்டில் தண்ணீர் இல்லாததால் மிகவும் சிரமமாக உள்ளது.
முற்றுகை-தர்ணா
 இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் குடிநீரை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவே எங்களுக்கு இதற்குத் தீர்வு கிடைத்தால் மட்டுமே இங்கிருந்து செல்வோம் எனக் கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணாபோராட்த்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த பல்லடம் போலீசார் அலுவலகம் முன்பு இடையூறு செய்யக்கூடாது உங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் சொல்லுங்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என கூறியதையடுத்து கலைந்துசென்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சனிடம் கேட்டபோது முக்கிய கூட்டத்தில் இருப்பதாகவும், பிறகு பேசுவதாகவும் கூறினார்.

Next Story