தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2021 9:49 PM IST (Updated: 26 July 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தாராபுரம்,
தாராபுரம் அருகே உள்ள வீராட்சி மங்கலத்தை சேர்ந்த கோபிநாத்தை (20) மர்ம ஆசாமிகள் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. எனவே கொலையாளிகளை உடனே கைது  செய்யக்கோரியும்,  கோபிநாத் படுகொலைக்கு நீதி கேட்டும் தமிழ் புலிகள் கட்சியினர் தாராபுரம் அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் புலிகள் கட்சி மாநிலத் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொலை செய்யப்பட்ட கோபிநாத் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.  
குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.  இதில் திருப்பூர் மேற்கு மண்டல செயலாளர் ஒண்டிவீரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர்.

Next Story