மாவட்ட செய்திகள்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழைஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு + "||" + Extension of water flow to 35 thousand cubic feet per second

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழைஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழைஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
கனமழை
கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பாதுகாப்பு கருதி நேற்று கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரத்து 833 கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 900 கனஅடி தண்ணீர் என மொத்தம் 35 ஆயிரத்து 733 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 
இந்த தண்ணீர் இரு மாநில எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதே நிலையில் தொடர்ந்து நீடித்தது.
தீவிர கண்காணிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அங்குள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சத்திரம், ஊட்டமலை, நாடார் கொட்டாய், ஆலாம்பாடி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.