மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தக் கோரி மயிலாடுதுறையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தக் கோரி மயிலாடுதுறையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2021 10:25 PM IST (Updated: 26 July 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தக்கோரி மயிலாடுதுறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:-

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தக்கோரி மயிலாடுதுறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேகதாது அணை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வீரராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சிவராமன், கிருஷ்ணமூர்த்தி, அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநில குழு உறுப்பினர் இடும்பையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ‘யார்கோல்' அணையை அகற்ற வேண்டும். நிபந்தனையின்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 

கலெக்டரிடம் மனு

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வரதராஜன், கலியமூர்த்தி, கஜேந்திரன், மணி, ராதாகிருஷ்ணன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள், மனுவை பிரதமருக்கு அனுப்ப வேண்டுகோள் விடுத்தனர்.

Next Story