கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களுடன் பெண் போராட்டம்
சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி குழந்தைகளுடன் பெண் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
சிவகங்கை
சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி குழந்தைகளுடன் பெண் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கணவர் இறப்பு
மானாமதுரையை சேர்ந்தவர் ராஜேஷ்வரன். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்றிருந்தார். கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி அங்கு நடைபெற்ற விபத்தில் இறந்தார்.
இதை நண்பர்கள் மூலம் அறிந்த ராஜேஸ்வரனின் மனைவி சவுந்தரம் (வயது 25) அதிர்ச்சி அடைந்தார். மேலும் அங்கு இறந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
போராட்டம்
ஆனால் கணவர் இறந்து ஒன்றரை மாதமாகியும் அவரது உடலை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தனது 2 குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் இறந்த ராஜேஸ்வரனின் உடலை மீட்டுத்தரக் கோரியும், உரிய இழப்பீடு பெற்றுத் தரக்கோரியும் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து போலீசார் அங்கு வந்து அவர்களுடன் பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story