தீயில் கருகி மூதாட்டி சாவு


தீயில் கருகி மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 26 July 2021 5:35 PM GMT (Updated: 26 July 2021 5:35 PM GMT)

தீயில் கருகி மூதாட்டி சாவு

இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 63). இவர் சமையல் செய்யும்போது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை உறவினர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story