பொன்னை அணைக்கட்டு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ராணிப்பேட்டை
பொன்னைைய அடுத்த கோடியூர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. குடிநீர் வசதி கேட்டு அப்பகுதி பொதுமக்கள் நேற்று பொன்னை- லாலாப்பேட்டை சாலையில் அணைக்கட்டு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் வசதி குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் பொதுமக்களிடம் கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story