மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Tamil Nadu Farmers Association protest

திருவண்ணாமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். 

இதில் தென்பெண்ணையாற்றின் துணை ஆறான மார்கண்டேய ஆற்றில் கர்நாடகம் கட்டியுள்ள யார்கோல் அணையை அப்புறப்படுத்த வேண்டும். கர்நாடகம் காவிரியில் மேகதாது அணை கட்டுவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சி.பி.ஐ., ஏ.ஐ.டி.யு.சி., உள்பட பல்வேறு அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.