விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும். காவிரி நதிநீர் ஆணையத்திற்கு ஆணையர் நியமிக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சவுந்தரபாண்டியன் மற்றும் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், மாநில குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story